மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

கோட்டூரில் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

Update: 2022-11-29 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கோட்டூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட பண்ணை திலேபியா மீன் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் முன்னிலை வகித்தார்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய மீன்வளத்துறை வல்லுனர் ஹினோ பெர்ணான்டோ திலேபியா மீன் வளர்ப்பு மற்றும் பண்ணை குட்டையில் மீன் வளர்க்கும் நிலையில் கடைபிடிக்கும் வழிமுறைகள் பற்றி பேசினார்.திருமருகல் வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வக்குமார் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பேசினார். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு மற்றும் ராஜ்குமார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்