8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு போட்டி தேர்வு நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு போட்டி தேர்வு பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி, கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளி, ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி, கிணத்துக்கடவு மேல்நிலை பள்ளி, மாரியம்மன் பெண்கள் மேல்நிலை பள்ளி உள்பட 9 பள்ளிகளில் நடைபெற்றது. தேசிய திறனாய்வு போட்டி தேர்வு எழுதுவதற்காக 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மொத்தம் 2,451 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 2,327 பேர் எழுதினர். 124 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வினை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்