என்.சி.சி.யில் சிறப்பாக விளங்கியவர்களுக்கு பாராட்டு விழா

என்.சி.சி.யில் சிறப்பாக விளங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-09-14 17:13 GMT

தமிழ்நாடு என்.சி.சி. துணை இயக்குனர் ஜெனரல் அடுல்குமார் ரஸ்டோகி வேலூருக்கு வருகை தந்தார். அவர் காட்பாடி காந்திநகரில் உள்ள 10-வது பட்டாலியன் தேசிய மாணவர் படை அலுவலகத்தை பார்வையிட்டார். அப்போது அவரை கமாண்டர் கர்னல் ஜர்னல் சிங், 10 வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சஞ்சய்ஷர்மா ஆகியோர் வரவேற்றனர். லெப்டினன்ட் கர்னல் சுந்தரம் உடன் இருந்தார்.

பின்னர் ஊரீசு கல்லூரியில் என்.சி.சி. அலுவலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் அடுல்குமார்ரஸ்டோகி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

விழாவில் பிஷப் ஷர்மாநித்தியானந்தம், துணை முதல்வர் ஆனிகமலாபிளாரன்ஸ், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி. முதன்மை அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் 10-வது பட்டாலியன் சார்பில் அகில இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவி சத்தியபிரியா, மாணவர் கரண்குமார் மற்றும் சிறந்து விளங்கிய என்.சி.சி. மாணவர்களையும் அவர் பாராட்டினார்.

முடிவில் ஊரீசு கல்லூரியின் என்.சி.சி.அலுவலர் லெப்டினன்ட் ஞானலின்ஷைனி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்