சாதனை படைத்த மாணவிக்கு ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு
சாதனை படைத்த மாணவிக்கு ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் மகள் இந்திரா. இவர் வேப்பந்தட்டை தாலுகா உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனத்தில் பி.எட் பட்டயப்படிப்பு படித்த முன்னாள் மாணவி ஆவார். இந்நிலையில் இந்திரா தமிழக அரசு நடத்திய டி.என்.பி.எஸ்.சி. ஜெயிலர் பதவிக்கான தேர்வில் வெற்றிப்பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் சாதனைப்படைத்த இந்திராவுக்கு உடும்பியம் ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முருகேசன், செயலாளர் சித்ரா முருகேசன் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர்கள், ஈடன் கார்டன்ஸ் கல்வி நிறுவனங்களின் முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.