அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

Update: 2023-09-10 19:38 GMT

தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவிலும், குறுவட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை புறநகர் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், கால்பந்து, டென்னிஸ், வளைகோல்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் 2-ம் இடத்தையும் சதுரங்கம், கேரம், இறகுபந்து ஒற்றையர், இரட்டையர் மற்றும் ஆக்கி ஆகிய விளையாட்டுகளில் முதலிடத்தையும், தடகள போட்டிகளில் 14 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள், 16 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி, உடற்கல்வி ஆசிரியை ஹில்டாபொன்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்