சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-07-01 20:03 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக துறை பிரிவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறுநீரக சிகிச்சையினை சிறப்பாக செய்து வரும் டாக்டர் பிரபாகரன், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையில் கொரோனா கால கட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த டாக்டர் கலையரசன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்