நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா

வேதாரண்யம் அருேக நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா நடந்தது

Update: 2022-09-21 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கருப்பம்புலம் தெற்கு செட்டியக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றுபவர் கவுரியம்மாள். கல்வி கற்பித்தல் திறன், மாணவர்களின் நலன் காத்தல் உள்பட இவரது பல்வேறு கல்வி சேவைகளை பாராட்டி சென்னை கோல்டன் போர்ட் லயன்ஸ் கிளப் சார்பாக 2022-23-ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கியது. நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியை கவுரியம்மாளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமமக்கள் கலந்து ெகாண்டு கவுரியம்மாளுக்கு சால்வை, மாலை அணிவித்து பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்