காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
வேலூர் முப்படை பயிற்சி மையத்தில் காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூரில் உள்ள முப்படை பயிற்சி மையத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்விற்கு பயிற்சி பெற்ற 382 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா முப்படை பயிற்சி மையம் வேலூர் வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு முப்படை பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கோபிநாத் தலைமை தாங்கி 2-ம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு நினைவுப்பரிசு, கேடயங்கள் வழங்கி பேசினார்.
தொடர்ந்து 2-ம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் முப்படை பயிற்சி மையத்தில் தற்போது காவலர் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தங்களின் அனுபவங்கள், காவலர் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினர். முன்னதாக முப்படை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். இதில், முப்படை பயிற்சி மைய நிர்வாகிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.