கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

புளியங்குடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-11-26 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 16-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.வி.சி. கல்வி குழுமத்தின் தாளாளர் முருகையா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ரம்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்