விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-01-30 18:45 GMT

தேவகோட்டை,

தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் சிறப்பான சேவை மற்றும் திறமைகளை பாராட்டி மாண்புமிகு தமிழர் விருது கரூரில் வழங்கப்பட்டது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் சேவை மற்றும் திறமைகளை பாராட்டி மாண்புமிகு தமிழர் விருது, கேடயம், பதக்கம் ஆகியவற்றை திருச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் வழங்கினார். விருது பெற்ற ஆசிரியரை பள்ளித் தலைமை ஆசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஊராட்சி மன்றத் தலைவர் மிக்கேல் ராஜ், உதவித் தலைமை ஆசிரியை விமலா, ஆசிரியைகள், அலுவலர்கள் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்