போலீஸ் வேலைக்கு தேர்வானவா்களுக்கு பணி நியமன ஆணை
போலீஸ் வேலைக்கு தேர்வானவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்கள் 3,552 பேர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு எழுத்துதேர்வு மற்றும் உடல் தகுதிதேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 64 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் தேர்வாகியுள்ளனர். மேற்படி தேர்வான நபர்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கி பாராட்டினார்.