619 பேருக்கு பணி நியமன ஆணை; கனிமொழி எம்.பி. வழங்கினார்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

Update: 2022-10-29 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் கனிமொழி எம்.பி. தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர். இதில் 619 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வரவேற்றார்.

பணி நியமன ஆணை

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி. கலந்துகொண்டு தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் வீரபத்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்