பணி நியமன ஆணை
நாகையில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 277 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 89 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றன. இதில் 2261 பேர் கலந்து கொண்டனர். முகாமில் 277 பேர் தனியார் துறை நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை திருச்சி மண்டல இயக்குனர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம் - நிர்வாகம்) முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.