உத்தமர் காந்தி விருது பெற விண்ணப்பி்க்கலாம்

உத்தமர் காந்தி விருது பெற விண்ணப்பி்க்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-

Update: 2023-01-10 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு 2022 -ம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளை விருதுக்கு மதிப்பீடு செய்ய கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. .இவ்விருதிற்கு விண்ணப்பிக்க ஊரக வளர்ச்சி துறையின் இணையதளமான http://tnrd.tn.gov.in என்ற முகவரியில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி கருத்துரு காரணிகளை தேர்வு செய்து படிவத்தினை முறையாக வருகிற 15-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதன்படி மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறப்பட்ட மொத்த கருத்துருக்களில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் இயக்குனர் அளவில் உள்ள உயர்மட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம் மாநில அளவில் சிறந்த 37 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் 37 கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருதுக்கான கேடயம் மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் வழங்குவார். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்