சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோர்ட்டு தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும், சட்ட ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலேசாகர் பதவி தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அஅடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதிக்குள் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்து, குறைந்தது 5 ஆண்டுகள் கோர்ட்டு பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.