தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-20 17:43 GMT

தமிழ் செம்மல் விருது

தமிழ்நாட்டில் தமிழ் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சி துறையால் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தோ்வு செய்து, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் "தமிழ் செம்மல்" விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2023-ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

10-ந்தேதிக்குள்...

விருதுக்கான விண்ணப்ப படிவத்தை உரியவாறு பூர்த்தி செய்து, தன் விவரக்குறிப்பு, நூல்கள்- கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அது தொடர்பான விபரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம் மற்றும் 2 புகைப்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பெரம்பலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதிக்குள் கிடைக்க பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள "தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329-225988 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்