மானிய கடனில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-04 20:28 GMT


பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு திட்டம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகள் மூலமாக கடன் பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க ஆர்வம் மிக்க தொழில் முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சேவை பிரிவிற்கு ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும், உற்பத்தி பிரிவிற்கு ரூ. 10 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. திட்ட அளவிற்கு கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. இதற்கு அதிக மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் மையத்திற்கு ஒதுக்கீடு

சேவை பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரையிலும், உற்பத்தி பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்படுகிறது. 2023-2024-ம் நிதியாண்டின் குறியீடு 304 நபர்களுக்கு ரூ. 992 லட்சம் மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதலால் இந்த திட்டத்தில் வழிமுறைகளை பின்பற்றி வங்கியால் ஒப்பந்தம் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறங்களுக்கு 25 சதவீதம் மானியம், கிராமப்புறத்தில் 35சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இணையதளம்

பொது பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு 5 சதவீதமும் சொந்த மூலதனமாகும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இணையதளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்