சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-13 18:45 GMT

கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்த அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து ஒன்றியங்களிலும் சத்துணவு திட்டம் பாதுகாப்பு உரிமை மீட்பு கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்-அமைச்சருக்கு அனுப்புவது, கரூர் மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் அவர்களை நேரில் சந்தித்து வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்