மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-01 18:05 GMT

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது 2022-23-ம் ஆண்டிற்கு வழங்குவதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெளியிட்டு, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மணிமேகலை விருது பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:-

முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாக பயன்படுத்தல், வங்கிக்கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல். மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று கொள்ளலாம். அரியலூர் மாவட்டத்தில் விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் வருகிற 25-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை கொடுக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்