இ-சேவை மையம் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையம் தொடங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Update: 2023-06-09 18:45 GMT

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது அனைவருக்கும் இ.சேவை மையம் திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை வலைத்தளத்திலிருந்து https://www.tnesevai.tn.gov.in/, அல்லது https://tnega.tn.gov.in/, இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கும் இத்திட்டத்தில் பயன்பெற வருகிற 30-ந் தேதியன்று இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3,000 ஆகும் மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும். இந்த விண்ணப்ப கட்டணத்தை இணைய பரிவர்த்தனை முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை "முகவரி" செயலியை பயன்படுத்தி காணலாம் அல்லது, https://tnega.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்