இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-02-25 18:45 GMT


இந்திய ராணுவத்தில் அக்னீவீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் வருகிற மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள இளைஞர்கள் மேற்படி இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்