தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-11 13:39 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வண்டலூர் தாலுகாவில் முருகமங்கலம் -1,260 குடியிருப்புகள், கீரப்பாக்கம்- 1,760 குடியிருப்புகள், தாம்பரம் நகராட்சி அஞ்சுகம் நகர்-192 மற்றும் பெரும்பாக்கம்- 4,284 அடுக்குமாடி வீடுகள் கட்டி முடியும் தருவாயில் உள்ளது.

பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். மேலும் பயனாளிகள்அரசின் மானிய தொகை போக மீதி பங்கு தொகையை செலுத்துவதற்கு விருப்பம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.


ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெறக்கூடியவராக இருத்தல் வேண்டும். இந்தியாவுக்குள் வேறெங்கும் சொந்த வீடு, வீட்டு மனை இருத்தல் கூடாது. நகர்ப்புற பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வரும் 22-ந்தேதி காலை 11 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் குடும்பத் தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் கார்டு், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களின் நகல்களை கொண்டு வரவேண்டும். பயனாளிகளுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்