பார்வையற்றோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்
சிவகங்கையில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை
சிவகங்கை அரசு பார்வை திறன் குறை உடையோருக்கான தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீர வேல் பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கையில் உள்ள பார்வைத்திறன் குறை உடையோ ருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2022- 23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளியில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சேரலாம். விடுதி சார்ந்த இந்த பள்ளியில் பிரெய்லி செயல்முறையில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் கணினிப் பயிற்சியும் உடல் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.
பராமரிப்பு
இங்கு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய விடுதி வசதியும் உள்ளது. அத்துடன் மாணவ-மாணவிகளை பாதுகாத்து பராமரிக்க அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் உள்ளனர். எனவே இந்த பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் சிவகங்கை- இளையான்குடி ரோட்டில் உள்ள பள்ளியில் நேரில் சென்று விண்ணப் பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.