'தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம்'- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

‘தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்போம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-26 22:00 GMT

மதுரை,


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.


இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்தால் வரவேற்போம் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-


"எங்களைப் பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்தால் வரவேற்போம். அது ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி. முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழ்நாட்டைக் காப்போம், தமிழர்களின் உரிமைகளை மீட்போம்' என்று கூறியிருக்கிறார். இதன்படி தமிழகத்திற்கு யாராவது பாதகம் செய்தால் அதை எதிர்த்து நாங்கள் குரல் கொடுப்போம்."


இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்