சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன் - அன்வர் ராஜா பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா.

Update: 2023-08-04 05:24 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2021ம் ஆண்டு அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதன் பின்னர் அன்வர் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து, அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. கட்சியில் இருந்து விலகி இருந்தாலும் கட்சியினர் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை; கட்சியின் அனைவருடனும் தொடர்பில் தான் இருந்தேன். இந்தியாவில் காங்கிரஸை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் 

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்