தொல்பொருட்கள் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

தொல்பொருட்கள் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-05-06 19:13 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் முதல்கட்ட அகழாய்வில் 2,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதனை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. அதில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்க்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்