கோவில்பட்டியில்தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில்தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நேற்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படிக்கும் பட்டியல் இன மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரியும், அவருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க கோரியும், நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு நடத்த அரசு ஆணை பிறப்பிக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கலையரசன், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் தினேஷ் குமார், மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, தமிழ்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முருகன், நகர செயலாளர் கருப்பசாமி, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நம்பி ராஜ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.