புகையிலை எதிர்ப்பு தின பேரணி
அண்ணாமலைநகரில் புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடந்தது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அருகே சிவக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அண்ணாமலை நகர் பேரூராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் பழனி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து புகையிலையை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. .நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.