புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-09-28 17:19 GMT

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், புகையிலை ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். இதில், மாவட்ட தொற்றுநோய் அலுவலர் பொன் பத்மநாபன், உதவி திட்ட மேலாளர் சுரேஷ், உதவி இயக்குனர் மலர்விழி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கோகிலா, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்