புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
சாத்தான்குளம் அருகே புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
தட்டார்மடம்:
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் அருகே சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேய்குளம் பஜாரில் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்களுக்கு புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை பயன்படுத்துவதால் அருகில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் மற்றும் டெங்குமஸ்தூர் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனையடுத்து சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர் மத்தியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் கிஷோர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.