புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நன்னிலத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-22 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலத்தில் பொது சுகாதார துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர், முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள் ஹட்சன், மிதுன், கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்