கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்பட அனைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.