கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.