கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டையில் கலெக்டர்தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-20 17:27 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அனைத்து துறை அரசு அலுவலர்களும், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கலால் உதவி ஆணையர் சத்ய பிரசாத் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்