கொடுஞ்செயல் எதிர்ப்புநாள் உறுதிமொழி ஏற்பு

கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்புநாள் உறுதிமொழி ஏற்பு

Update: 2022-05-20 17:23 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜா, மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை சூப்பிரண்டு சுரேஷ், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஆகியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்