பாய்லர் ஆலையில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
பாய்லர் ஆலையில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடந்தது.
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை உள்ளது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் அவர்களிடம் இருந்து தொழிலாளர்களை எப்படி மீட்பது, நிறுவனத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. பாய்லர் ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள நிர்வாக கட்டிடம் எண் 24 மற்றும் கட்டிடம் எண் 214 பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டர் திவாகர் தலைமையில் 120 படைவீரர்களும், தமிழ்நாடு கமாண்டோ படையை கமாண்டர் பொன் ராஜ்குமார் தலைமையில் 40 வீரர்களும் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், பாய்லர் ஆலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலவேணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.