மூடநம்பிக்கை ஒழிப்பு கையெழுத்து இயக்கம்
மூடநம்பிக்கை ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு அறிவியல் இயக்கத்தின் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார். ஆகஸ்டு 20 முதல் 2-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரமும், அறிவியல் அற்புதங்களை விளக்கும் மந்திரமா? தந்திரமா? போன்ற அறிவியல் விழிப்புணர்வு ஊர்வலம், குறும்படம் திரையிடுதல், வினாடி- வினா போட்டி உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன.