ரெயில் நிலையத்தில் சமூக விரோத செயல்

ரெயில் நிலையத்தில் சமூக விரோத செயல் நடப்பதை தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-05 17:36 GMT


அரக்கோணம் ரெயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பயண டிக்கெட் வழங்கும் கட்டிடத்தின் முன்பு மாலை நேரத்தில் மூடிய பிறகு இருள் சூழ்ந்ததும் சமூக விரோதிகள் சிலர் பயணிகள் செல்லும் வழியிலேயே அமர்ந்து மதுபானம் குடிக்கின்றனர். பின்னர் காலி பாட்டில்கள், மற்ற பொருட்களை அங்கேயே போட்டுச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியாக பெண்கள், குழந்தைகளுடன் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வடக்குப் பகுதியில் நிரந்தரமாக ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்