பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-07 18:13 GMT

அரவக்குறிச்சியில் வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் ஜெயந்திமணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அரவக்குறிச்சி பகுதியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற அனைவரும் உறுதி எடுத்து கொண்டனர். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன், பேரூராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்