போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கோவிலூரில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-11 18:45 GMT

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருக்கோவிலுர் பஸ் நிலையத்தில் நடந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தவிர்க்க போதை பொருட்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி கூறினார். தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் குறித்த விவரம் யாருக்காவது தெரிந்தால், அது குறித்த தகவலை போலீசாருக்கு உடனே தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தால் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன் மூலம் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்