போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-08-12 17:03 GMT

வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சீனுவாசகுமரன், உடற்கல்வி இயக்குனர் அகிலன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஓட்டேரி பஸ்நிறுத்தம், ஆரணி சாலை வழியாக பாகாயம் பஸ்நிறுத்தம் வரை சென்றது. அங்கு போதைப்பொருள் தடுப்பது தொடர்பான தெருமுனை பிரசாரம் மற்றும் வாகன ஓட்டிகள், கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாகாயம் பஸ்நிறுத்தம் அருகே சாலையில் கல்லூரியை சேர்ந்த வணிகவியல் 3-ம் ஆண்டு மாணவி ஷர்மிளா போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெயிண்டால் ஓவியம் வரைந்திருந்தார். அதன் மூலம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாகாயம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில், கல்லூரி மாணவ-மாணவிகள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்