தமிழகம் முழுவதும் நாளை இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் - அமைச்சர் பொன்முடி

இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Update: 2022-10-14 08:50 GMT

சென்னை,

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது.

நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும். இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்