விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை

திருச்சி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2022-11-04 19:57 GMT

திருச்சி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வருவது அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வப்போது, தங்கம் கடத்தி வருபவர்களை பிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் திருச்சி விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய தீயணைப்பு துறையினர், பொருட்களை கையாளும் பிரிவினர், விமான நிறுவன ஊழியர்கள், விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகள், அலுவலர்கள் மாநகர காவல் துறையினர் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டனர்.

பயங்கரவாதிகள்

இந்த ஒத்திகையின் போது, பயங்கரவாதிகள் திடீரென்று விமான நிலையத்தில் நுழைகின்றனர். இதனையடுத்து அவர்கள் விமானத்தில் ஏறி, விமானத்தை கடத்த முயன்றனர்.

இதை தடுப்பதற்காக மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்கள் மறைவான பகுதியில் இருந்து துப்பாக்கியால் பயங்கரவாதிகளை சுட்டனர். பின்னர் பயங்கரவாதிகளிடம் இருந்து விமானத்தை மீட்டு, அதில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

உண்மை சம்பவம் போல் இந்த ஒத்திகை நடைபெற்றதால் விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதில் மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரர்கள் சுமார் 50 பேர் துப்பாக்கிகளுடன் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்