அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிசி ஆலைகளில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2022-09-19 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட அரிசி ஆலைகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் பெறப்பட்டு அரவைக்காக அனுப்பபடும் அரிசி ஆலைகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் அனுப்பபடுகிறதா, ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் யாரும் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்