போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-11-21 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி காவல்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமமான குஞ்சப்பனையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு கிராம மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். இதில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், நினைவு திறன் பாதிப்பு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே போதைப்பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்