போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்

கொள்ளிடம் அருகே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-08-23 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி, தாண்டவன்குளம், மாதானம் ஆகிய ஊராட்சிகளில் புதுப்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் இணையதளக் குற்றம் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டன. இதில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்திமதி சிவராமன், வாசுதேவன், எழிலரசி, துணைத்தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார், வேட்டங்குடி மற்றும் கேவரோடை உள்ளிட்ட கிராமங்களை் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்