மாணவ-மாணவிகள் சார்பில்போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
மாணவ-மாணவிகள் சார்பில்போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவெறும்பூர் போலீசார் மற்றும் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவ மாணவிகள் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் தொடங்கி திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது.பின்னர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து பேனரில் மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர். இதில் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிசந்திரன், மாணவ-மாணவிகள், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் இளங்கோவன் ஒருங்கிணைத்தார்.