போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கீழக்கரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கீழக்கரை,
கீழக்கரையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை கல்லூரி, பள்ளி, என்.சி.சி. மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பதாகை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியை கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஹ் ஆபிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கீழக்கரை தாசில்தார் சரவணன், கவுன்சிலர் ஷேக் ஹூசேன், ராமநாதபுரம் கோட்ட ஆய்வக அலுவலர் செண்பகலதா, ஆய்வாளர்கள் விஜயகுமார், முருகன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரம், மாவட்ட செயலாளர் ரமேஷ், உறுப்பினர் நூர்ஹசன், ஜே.ஆர்.சி. கன்வீனர் பாலா, முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத், ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சிவகார்த்திகேயன், டாக்டர் செய்யது ராசிக்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.