போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது
லால்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமை தாங்கி பேசுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் வரக்கூடும். குறிப்பாக மனநோய் என்பது நிச்சயமாக வரும். எனவே, கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து போலீசாருக்கு தயங்காமல் தகவல் கொடுக்க பொதுமக்களும், மாணவர்களும் முன்வர வேண்டும் என்றார். லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாலமுருகன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.