சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-15 18:37 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகம் முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் பெறுவதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ராணிபேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.2¼ லட்சம் பறிமுதல்

அப்போது பொதுமக்ககள் யாரும் உள்ளே வராதபடி அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை பூட்டினர். தொடர்ந்து அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களின் டிபன் பாக்ஸ், சாமி படத்தின் பின்பகுதி, அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து ரூ.9 ஆயிரம் மற்றும் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 240 கைபற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்